மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

-மின்னிய நிருபர்-

திருகோணமலை மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் வரவேற்புடன் ஆரம்பமானது.

மாவட்ட மற்றும் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப் ,சண்முகம் குகதாசன் , மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பிரகலாதன் , பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் பிரதேச அரசியல் வாதிகள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ், முப்படை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மூதூர் பிரதேசத்தின் கடந்த கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், எதிகால நிலையான அபிவிருத்தி திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் பொது அமைப்புக்கள், அரச நிறுவனங்கள், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன