
மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு
-மூதூர் நிருபர்-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் தலைமையிலும், கட்சியின் மூதூர் மத்திய குழுவின் அனுசரணையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இம்ரான் மகரூப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்