
மூதூர் தவிசாளர் தலைமையில் சத்தியபிரமாணம்
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் , ஊழியர்களின் 2026 புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
இவ் முதல்நாள் நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



