
மூதூர். சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா
-கின்னியா நிருபர்-
கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டைபறிச்சான் வடக்குப்பகுதியில் அமைந்த சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை முமுநிலவை முன்னிறுத்தி வரும் கேட்டை நட்சத்திரமும் கடக லக்கினமும் கூடிய காலை 8.00 மணி 53 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினத்திடம் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமானது.
இவ்வாலயம் 120 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான ஆலயமாகும்.வேளை நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால்பழப்பூசை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர்வார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நிறைவாக மாலை 3.00 மணிக்கு விஷேட தீ பாராதனைகளுடன் பூசை இடம்பெற்று, ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திருஉலாவந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பாள்.
அடியார்களின் நலன் கருதி பேரூந்து வசதி மூதூரில் இருந்து நாகம்மாள் ஆலயம் வரை ஒமுங்கு செய்யப்பட்டன.
மேலும் வழமை போல் ஆலயத்தில் இவ்வருடமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.





