மூதூர்-சந்தோசபுரம் கிராமத்தில் இலவச நடமாடும் வைத்திய முகாம்!
-மூதூர் நிருபர்-
தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “மறுமலர்ச்சி நகரம்” வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, மூதூர் -சந்தோசபுரம் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை இலவச நடமாடும் வைத்திய முகாம் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில் இவ் வைத்திய முகாம் நடைபெற்றது.
இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக வைத்திய சேவையினை பெற்றுக் கொண்டனர்.அத்தோடு நடமாடும் பேரூந்து பற் சிகிச்சையும் இதில் இலவசமாக வழங்கப்பட்டு பொதுமக்கள் நன்மையடைந்தனர்.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதீஷ் சபை உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




