மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலய குறை நிறைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட கிளிவெட்டி மகாவித்தியாலயத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த கண்காணிப்பு விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்ததுடன் பாடசாலைக்கான கட்டிடங்கள், உள்ளக வெளியக அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்ததுடன் குறித்த குறைபாடுகளை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது பற்றிய விடயங்கள் தொடர்பான மகஜரும் கையளிக்கப்பட்டன.