
மூதூர் -ஆஷாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு
-மூதூர் நிருபர்-
மூதூர் -ஆஷாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
ஆஷாத்நகர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வை பள்ளிவாசல் நிருவாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இவ் இப்தார் நிகழ்வில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் சகோதர மதங்களைச் சேர்ந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திறந்தமை குறிப்பிடத்தக்கது.