மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் சிலுவைப் பாதை

-மூதூர் நிருபர்-

மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றது.

சிலுவைப்பாதையானது தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

அந்தோனியர் தேவாலயத்தின் அருட்தந்தை அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற சிலுவைப் பாதையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.