மூதூரில் விபத்து : மட்டு.வாழைச்சேனையை சேர்ந்தவர் படுகாயம்!
-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள வீதியில் , மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்து மூதூர் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துச் சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.