மூதூரில் சிறுவர் பாதுகாப்பு வார ஊர்வலம்

-மூதூர் நிருபர்-

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி ஊர்வலமும், வீதி நாடகமும் மூதூர் -பாட்டாளிபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலமானது பாட்டாளிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிட முன்றலிருந்து ஆரம்பமாகி எபிநேசர் சிறுவர் அபிவிருத்தி மையம் வரை இடம்பெற்றது.

சிறுவர்களுக்கான சிறுவர் நேயம் உள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழல் ஒன்றை கட்டி எழுப்புவோம் எனும் தொணிப் பொருளின் கீழ் இவ் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இடம்பெற்றது.இதன்போது ஊர்வலத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு பாட்டாளிபுரம் எபிநேசர் சிறுவர் அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது. ஊர்வலத்தில் சிறுவர்சிறுமியர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.