மூதூரில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால் குழி மற்றும் முன்னம்பொடிவெட்டை ஆகிய பகுதிகளில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மூதூர்
பொலிஸார் தெரிவித்தனர்

மூதூர் விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இறால் குழி காட்டு பகுதியில் இருவரும், முன்னம்பொடிவெட்டையில் ஒருவரும் கை செய்யப்பட்டுள்ளனர்.

கை செய்யப்பட்டவர்கள் 43, 51 மற்றும் 21 ஆகிய வயது பிரிவு பிரிவை சேர்ந்தவர்கள்.

இவர்களிடமிருந்து ஐந்து லட்சத்து 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் 52,500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாகவும், இவர்களை இன்று மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.