மூதூரில் கலை இலக்கிய கூடல்

-மூதூர் நிருபர்-

மூதூர் – சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய கூடல் நேற்று திங்கட்கிழமை மாலை அனாமிகா கலரியில் இடம்பெற்றது.

இவ் கலை இலக்கிய கூடலில் நடனம்,பாடல்கள் வசந்தன் கூத்து, வட மோடிக்கூத்து,தென் மோடிகூத்துக்களும் இடம்பெற்றன. மேலும் நூல் வெளியீடுகள்,அனாமிகா நாகேஸ்வரன் நினைவுரைகளும் இடம்பெற்றன.

அத்தோடு கூத்துக்கலைக்கான தலைக்கோல் விருது, நடன கலைக்கான தலைக்கோல் விருது ,இசைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது ,கண்ணுள் வினைஞர் விருது,ஆசிரியர் மாமணி விருதுகள் பல்வேறு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன .

மேலும், சேனையூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியராக இருந்து இன மத பேதங்களுக்கு அப்பால் சிறப்பாக சேவையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் வைத்திய கலாநிதி எம்.பௌசான் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார் .

இந்நிகழ்வில் அதிதிகளாக மூத்த இலக்கியவாதிகள், பாடசாலைகளின் அதிபர்கள் ,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.