
மூதூரில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் “இணைந்த கரங்களினால் ” வருடந்தோறும் வறிய மாணவர்களுக்கான உதவி புரிதல் செயற்பாடுகளைச் செய்து வந்தாலும் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிசம்பர் 1 மூதூர், பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் வைத்து 30 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர் .
மேலும், மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளக்கந்தை கிராம மக்களுக்கு நேற்று திங்கட்கிழமை மூதூர் பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலய அதிபர் பு.ஜெயகாந்தன் வேண்டுகோளுக்கு அமைய இணைந்த கரங்கள் அமைப்பினரால் அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


