மூதூரில் ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை இலவச வைத்திய முகாம்

-மூதூர் நிருபர் –

மூதூரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து 30 க்கும் மேற்பட்ட வைத்தியர்களை கொண்டு ஏற்பாடு செய்த “ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை” எனும் தொணிப் பொருளிலான மாபெரும் இலவச வைத்திய முகாம் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சுகாதார பிரிவினர்,பொலிஸார்,  இரானுவத்தினர்,கடற்படையினர்,பிரதேச சபை என பல்வேறு அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் சமூக நோக்க அடிப்படையில் இவ் வைத்திய முகாம் இடம்பெற்றது.இதில் ஆங்கில, ஆயுர்வேத வைத்திய சேவைகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய நிபுணர்களினானால் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.

இன,மத பேதங்களுக்கப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இலவச வைத்திய முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இவ் வைத்திய முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வில் இரானுவ உயரதிகாரிகள், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.