மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

-மூதூர் நிருபர்-

வெள்ளம் காரணமாக மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன .

பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளமையினால் இடப் பெயர்வு விபரங்களை அறிய முடியாதுள்ளது.

தோட்டப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்ட பலர் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் படகுமூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

மூதூரில் உள்ள வீடுகள் வயல் நிலங்கள் ,நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன .

இடைடை தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான ஏற்பாடுகளில் மூதூர் பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது .

அதைவேளை அதிக வெள்ளம் காரணமாக திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.