
மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக பிரித்தானியாவில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 மணிவரை குறித்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையமானது பிரித்தானியாவில் உள்ள மிகப் பெரிய விமான நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
