மூடப்படும் வீதிகள்: சாரதிகளுக்கு அறிவிப்பு

சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதிக்கான போக்குவரத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் மற்றும் செராமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான வீதி போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் குறித்த வீதி மூடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பெப்ரவரி 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு முடியும் வரை இந்த வீதி மீண்டும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.