மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்
ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
நாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நிலை நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் கூட பாதிப்பதாகவும், குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அங்கு பணிபுரியும் மக்களின் தொழிலுக்கு என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்கமுடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்