
முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரண பொதிகள் விநியோகம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – நாமல்வத்த நல்லகுட்டியாறு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கெயார் ஸ்டேசன் (CARE STATION) தொண்டார்வ அமைப்பினூடாக இன்று வெள்ளிக்கிழமை 90 மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருடன் CARE STATION ஒருங்கிணைப்பாளர்களான முகம்மட் அஸ்வர்,முகமட் அப்ரின் மற்றும் முகம்மட் அஸ்மிர் ஆகியோர் பங்கேற்றனர்.
“பாடசாலை அடிப்படையிலான சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடைய பங்கேற்புடன் கல்வி அபிவிருத்திச் செயற்பாடு”என்ற செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வறுமையில் வாழ்ந்து வரும் குடும்ப மாணவர்களுக்கு தலா 5000 பெறுமதியான மேற்படி கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப் பைகள் இவ் வருடம் வழங்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் கல்வியை மேம்படுத்தும் விதத்திலேயே இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் கெயார் ஸ்டேசன் அமைப்பின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

