
முழுவதும் தங்கத்திலான மோட்டார் சைக்கிள் : விலை எவ்வளவு தெரியுமா?
டுபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது, இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர்.
மணிக்கு 300 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர்.
இதன் விலை 5.76 கோடி என சொல்லப்படுகின்றது.
இதனை சுற்றி வாலிபர்கள் ஈக்கள் மொய்ப்பது போல சுற்றி வர, அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
