முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலையை அடைந்தது
-மூதூர் நிருபர்-
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு, இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை அடைந்தது.
குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு, ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியிருந்தது.
குறித்த படகு திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உட்பட 103 பேர் இருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்