முள்ளிப்பொத்தானை சூரங்கல் வரையான வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் ஆறு வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை சூரங்கல் வரையான வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் இடம் பெற்றது.

சுமார் 285 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த முள்ளிப்பொத்தானை சூரங்கல் வீதியானது 1010 மீட்டர் தூரத்தை கொண்ட வீதி அபிவிருத்தியாக ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீம ன, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதம பொறியாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.