ஈச்சநகரில் காட்டு யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லையால் தாங்கம் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஞாயிற்றக்கிழமை இரவு நள்ளிரவு 2.00 மணியளவில் ஈச்சநகர் குளத்தை அண்டிய பகுதியில் ஊருக்குல் புகுந்த காட்டு யானை பயிர்களையும் உடைமைகளையும் சேதத்துக்குள்ளாக்கி விட்டு சென்றுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள ஈச்ச நகர் குளத்தின் வழியாக காட்டு யானைகள் அதிகம் ஊருக்குல் படையெடுக்கின்றது எனவும் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இரவில் நிம்மதியாக கூட தங்கள் பிள்ளைகளுடன் தூங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களின் காணிக்குள் உள்ள தென்னை,பலா,வாழை போன்ற சுமார் 15 க்கும் மேற்பட்ட பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே இக் காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து அச்சமின்றி வாழக் கூடிய சூழ் நிலைகளை ஏற்படுத்தி தருமாறு உரிய அதிகாரிடம் அமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.