முள்ளங்கி நன்மைகள்

முள்ளங்கி நன்மைகள்

முள்ளங்கி நன்மைகள்

⬜🟩முள்ளங்கி கிழங்கு வகை காய்கறிகளில் ஒன்றாகும். இதில் அதிக நீர் சத்துக்கள் அடங்கியுள்ளது. பெரும்பாலும் இதனை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டர்கள். ஆனால் இதில் அதிகப்படியான சத்துக்களை கொண்டுள்ளது. அதாவது வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதனை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

🧄முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கொண்டவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது.

🧄நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தேவையான வைட்டமின் சி முள்ளங்கியில் அதிக அளவு  இருக்கிறது. நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி வைரஸ் மற்றும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கின்றது.

🧄முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும். மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.

🧄உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு முள்ளங்கி பெரிதும் உதவி புரிகிறது. இந்த வேர் காய்கறியானது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதைத் தவிர, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் பருமனைக் குறைக்கிறது. மேலும் இது அசிடிட்டி, வாய்வு தொல்லை, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

🧄முள்ளங்கியானது கல்லீரலை சுத்தம் செய்வதற்கும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. கல்லீரலில் இருக்க கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தம் செய்வதற்கு முக்கிய பங்கு பெற்றுள்ளது. கல்லீரலில் உற்பத்தியாக கூடிய Bilirubin உற்பத்தியை கட்டுப்படுத்தி கல்லீரலை பாதுக்காக்கிறது.

🧄முள்ளங்கி சாப்பிட்டால், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும். மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

🧄ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருந்தால், உடல் வறட்சி அடையும். உடல் வறட்சி நீடித்தால், அதுவே உடலில் பல்வேறு பிரச்சனைகளை வரவழைத்துவிடும். ஆனால் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம். இந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

🧄சிறுநீரகம் பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள் முள்ளங்கியை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் முதல் சிறுநீரக  தாரைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும். அதுமட்டுமில்லாமல்  சிறுநீரகத்தில் ஏற்படும் கல் அடைப்பு பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள் முள்ளங்கி ஜூஸ்  குடித்தால் சுலபமாக கல் அடைப்பு நீங்கிவிடும். மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதற்கும் உதவியாக இருக்கிறது.

🧄இருதயத்தை பலப்படுத்துவதற்கு முள்ளங்கி உதவுகிறது. முள்ளங்கியில் இருதயத்திற்கு தேவையான Anthocyanin நல்ல அளவில் இருக்கிறது. இருதய சுவர்களை பலமாக்கி இருதயம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி இருதய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கும்  இந்த முள்ளங்கி சிறப்பான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.

🧄முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி, ஜிங்க், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முகப்பரு வராமல் தடுக்கிறது. முகம் பொலிவின்றி இருந்தால், முள்ளங்கியை அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

முள்ளங்கி நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்