முளைகட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது

முளைகட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது

முளைகட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது

💢முளைகட்டிய பயறுகள், பலருக்கு விருப்பமான காலை உணவாகும். ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறன. முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் சாப்பிடுகிறார்கள் சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் சாப்பிடுகிறார்கள்.

💢சாதாரணமாக நேரடி பயறுகளாக எடுத்துக் கொள்ளும்போது கிடைக்கின்ற சத்துக்களை காட்டிலும், முளைகட்டிய பிறகு கூடுதலாக நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. குறிப்பாக அதிக வைட்டமின் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. முளைகட்டிய பயறுகள் நம் பசி உணர்வை கட்டுப்படுத்தும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். அதே சமயம், முளைகட்டிய பயறு வகையை வேக வைத்து சாப்பிடுவது நல்லதா, அல்லது வேக வைக்காமலேயே எடுத்துக் கொள்ளலாமா என்றொரு வாதம் மற்றொருபக்கம் நடைபெறுகிறது. எனவே இந்த ஊட்டச்சத்துமிக்க உணவை சாப்பிட சிறந்த வழி எது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

💢அதிக ஊட்டச்சத்து மற்றும் ப்ரோடீன் நிறைந்துள்ளதால், சிலர் முளைகட்டிய பயறுகள் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் எதையும் பச்சையாக சாப்பிடுவது வயிற்று வலி, பிடிப்புகள், வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு உடலும் வித்தியாசமான கட்டமைப்பை கொண்டுள்ளன மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதால், அவரவர் தங்களின் தனிப்பட்ட உடல் அமைப்பின் அடிப்படையிலேயே எப்படி சாப்பிடுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எனவே மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சாப்பிடும் முளைகட்டிய பயறுகளை சமைத்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

💢ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக முளைகட்டிய பயறுகள் பொதுவாக சாலடுகள், சாண்ட்விச்கள், சூப்கள் மற்றும் ஸ்டிர்-ஃப்ரைஸ் ஆகியவற்றுடன் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும், முளைகட்டிய பயறுகள் பச்சையாக சாப்பிடும்போது அது பலருக்கும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. விதைகள் ஈரப்பதமான நிலையில் முளைப்பதால் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் வாய்ப்புகளும் அதிகம்.

💢எனவே பயறுகளை முளைகட்டிய பின் அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாகலாம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களுக்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம். நார்ச்சத்து, ப்ரோடீன், ஃபோலேட், மெக்னீசியம், வைட்டமின் சி போன்றவை முளைகட்டிய பயறுகளில் நிறைந்திருப்பதால், அவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் மேலும், எடை குறைப்புக்கு உதவுகிறது.

💢முளைகட்டிய பயறுகள் உங்கள் உடலின் வளர்ச்சிக்கும், ஊட்டத்திற்கும் சிறந்தவை. ஆனால் சில ஒவ்வாமைகள் அல்லது செரிமானப் பிரச்சனைகள் காரணமாக முளைகட்டிய பயறுகளை உண்பதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தாவரம் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மாற்று வழிகளாக முயற்சிக்கலாம்.

முளைகட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்