முல்லைத்தீவு-மல்லாவியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!
முல்லைத்தீவு-மல்லாவி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து அடையாளம் தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் பரிசோதனைக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் பாலிநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்