![முல்லைத்தீவு மனித புதைகுழி தொடர்பான நீதிமன்றத்தின் அறிவிப்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/07/Untitled-Project-5-2.jpg)
முல்லைத்தீவு மனித புதைகுழி தொடர்பான நீதிமன்றத்தின் அறிவிப்பு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி ரி. பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவவினால் புதைகுழி அகழ்வுக்கான செலவு குறித்த உத்தேச பாதீடு தாக்கல்செய்யப்பட்டது.
அகழ்வு பணியை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்னத்துடன், ராஜ் சோமுதேவா ஆகியோரை நீதிமன்றம் அழைத்துள்ளது.
இதேவேளை, தொல்பொருள் திணைக்களம் இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்