
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்ட காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானைகள், அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் முதலான பயிர்களை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே இவ்வாறு காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
