முல்லைத்தீவில் பாலத்தை துரித கதியில் சீரமைத்த இராணுவத்தினர்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் முற்றாக இடிந்து விழுந்த நிலையில், இலங்கை இராணுவப் பொறியியலாளர்கள் அதனை மீண்டும் சீரமைத்துள்ளனர்.

முல்லைத்தீவு – வெலிஓயா, முல்லைத்தீவு – திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு – கொக்கிளாய் ஆகிய முக்கிய வீதிகளுக்கான போக்குவரத்து இந்தப் பாலம் சரிந்ததால் முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

இதன்படி பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவப் பொறியியல் படையினர் சவாலான சூழ்நிலையிலும் அவசரப் பணிகளை மேற்கொண்டனர்.

இருவழிப் போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் மூலம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.