முல்லைத்தீவில் நாய்க்கு தூக்கு தண்டனை(update)

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டா பகுதியில் நாயை தூக்கிலிட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயை மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளமை போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலேயே பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்