
முறையாக பெற்ற கட்டிடத்தை மீண்டும் பலவந்தமாக வெளியேறுமாறு அச்சுறுத்தல்: ஹெலோ எப்.எம் பணிப்பாளர்
-கிண்ணியா நிருபர்-
முறையாக திருகோணமலை நகர சபையின் அனுமதியுடன் பெற்ற வாடகை கட்டிடத்தை திடீரென்று பலவந்தமாக வெளியேறுமாறும் அச்சுறுத்தல் விடுத்து சென்றதும் மனவேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஹெலோ எப்.எம் (FM) இன் முகாமைத்துவ பணிப்பாளர் பாறுக் முஹம்மட் சரீக் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நகர சபையின் செயலாளருக்கு ஐந்து இலட்சம் பணம் வழங்கி விட்டு கட்டிடத்தை கோர ஒரு சிறிய கட்டிடத்தை பெற்று தந்தார் இரு மாதங்களின் பின் மற்றைய கட்டிடத்தை பெற்று தனது நிறுவனத்திணை நடாத்தி செல்லுமாறு கூறி விட்டு இன்று பலவந்தமாக அலுவலகத்துக்குள் புகுந்து இக் கட்டிடத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கவுள்ளோம் நீங்கள் வெளியேறுங்கள் இல்லா விட்டால் தூக்கி வீசுவோம் எனவும் ஒரு குழுவினர் வந்து அச்சுறுத்தி விட்டு பொருட்களையெல்லாம் நாசமாக்கி விட்டு எமது அலுவலக ஊழியர்கள் மீதும் அப்பட்டமாக பேசி விட்டு சென்றுள்ளார்கள் இது தொடர்பில் நீதியான விசாரணை தேவை பொலிஸ் நிலையம் தொடக்கம் மனித உரிமைகள் பிராந்திய அலுவலகத்துக்கு சென்று முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை எனவே நீதியான விசாரனை மூலம் எங்களுக்கு நீதியை நிலை நாட்டுங்கள் என்றார்.
