
முறைப்பாடுகளை பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் புகார் அளிக்க புதிய தொலைபேசி எண்ணை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.
நுகர்வோர் தங்கள் முறைப்பாடுகளை 1977 என்ற ஹொட்லைன் ஊடாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்களைக் கைது செய்ய சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகாரசபை, கைது செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 100,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து தினமும் புகார்கள் பெறப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
