முறிகண்டி பகுதியில் விபத்து

-கிளிநொச்சி நிருபர்-

முல்லைத்தீவு மாவட்டதில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உணவகம் ஒன்றிலிருந்து ஏ9 வீதியை கடந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், அதே திசையில் நேராக பயணித்த கார் மோதியுள்ளது.

விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயங்களிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன பலத்த சேதங்களிற்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP