முன்பள்ளி சிறுவர்களுடன் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முன்பள்ளி சிறுவர்களை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியொன்று இன்று புதன் கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் முன்பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்தமையே முச்சக்கரவண்டி கவிழ்வதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்