முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரிய பணியில் சுமார் 34,000 பேர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்