முன்பள்ளியில் எல்.கே.ஜி. தினக் கொண்டாட்டம்
வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் எல்.கே.ஜி. தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
சக்ஸஷ் முன்பள்ளி முகாமையாளர் ஜே.அஸ்வர் தலைமையில் இடம்பெற்ற இக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சர்ஜூன், சிறப்பு அதிதிகளாக அருட்சகோதரி அமலநிதர்ஷினி அருள்நேசன், இளம் இலக்கியவாதி தமிழுராள் அனுஷ்திக்கா, முன்பள்ளி நிறுவுனர் ஏ.என்.எம்.றிழா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் 3 ½ தொடக்கம் 4 வயது மாணவர்கள் எல்.கே.ஜி பிரிவில் கல்வி கற்றுவருவதுடன் அவர்களின் முன்பள்ளி விருத்திக்கு ஏற்ப கலைத்திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விளையாட்டின் மூலம் கற்று, ஆளுமையை விருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளில் இக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
உலக வங்கியின் முன்பள்ளி பருவ அபிவிருத்தி திட்ட உதவியினை மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் முன் பிள்ளைப்பருவ அவிருத்திக்கான தேசிய செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஊடாக எல்.கே.ஜி. மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் எமது முன்பள்ளிக்கு வழங்கிவகைப்பட்டன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பள்ளி கல்விப் பணியகத்தின் கீழ் இயங்கும் எமது முன்பள்ளியின் கற்றல் செயற்பாட்டை வலுவூட்டுவதற்கு தேசிய முன் பிள்ளைப்பருவ அவிருத்திக்கான தேசிய செயலகம் மூலம் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் எமது முன்பள்ளியின் எல்.கே.ஜி பிரிவு மாணவர்களுக்களின் திறன்களை விருத்தி செய்ய உதவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்களின் திறன் விருத்திதயை மேம்படுத்த உழைத்த முன்பள்ளி அதிபர், என்.ஜே.நஸ்மிலா, ஆசிரியை எம்.பி.பிர்தௌசியா, எல்கே.ஜி பிரிவு ஆசிரியைகளான பீ.டிலக்சிகா, எம்.எஸ்.ஐ.வஸீமா, எம்.எப்.றிப்கா, நிகழ்வு முகாமையாளர் ஸபா எம். றபீட் ஆகியோர் நிறுவுனரால் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்