முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று புதன்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.