முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா காலமானார்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த உப தலைவருமான மூன்று பிள்ளைகளின் தந்தை பொன்.செல்வராசா தனது 77ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.
இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பி.ப 03 மணிக்கு 68 புகையிரத நிலையவீதி வீதி, மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
காலம் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இலங்கைத் தமிழ் அரசுக்கட்சின் மூத்த துணைத்தலைவராகவும், மத்தியகுழு, அரசியல், குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்