முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றவர் கைது

பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் ஒரு முன்னாள் பயங்கரவாதி என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோயிலில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அமிர்தசரஸ் காவல் ஆணையர் தெரிவிக்கையில்,

குர்பிரீத் சிங் புல்லர் “துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நரைன் சிங் சவுரா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு முன்னாள் பயங்கரவாதி மற்றும் கிரிமினல். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழமாக விசாரணை நடத்துவோம். எதையும் விட்டுவிட மாட்டோம்” என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்