முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதை மட்டுப்படுத்துமாறு அறிவிப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்திற்க் கொண்டு, அரசியல்வாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் அவரைப் பார்வையிடுவதை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன கோரியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்க்க பலர் வருவதால், அது அவரது உடல்நிலைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வயது காரணமாக அவருடைய இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாத்திரமே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாகவும் இருப்பினும் அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.