
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நாட்டிற்கு வருவது உறுதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகஸ்ட் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வரவுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சி.என்.என் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
அவரது வருகை இராஜதந்திர வழிகள் ஊடாக இடம்பெறும், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் அவருக்கு உத்தியோகபூர்வ வேலைகள் எதுவும் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பிரஜையான கோட்டாபய ராஜபக்ச, தேவைக்கேற்ப இந்த நாட்டுக்கு வரக்கூடியவர், என சி.என்.என் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
