முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் உட்பட 3வாகனங்கள் மீள் ஒப்படைப்பு?
முன்னாள் ஜனாதிபதிக்கு 6 வாகனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் உட்பட மூன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை மீள பெற்றுக்கொள்ளும் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில அவரது ஊடகப் பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, உளவுத்துறை அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான முன்னாள் தலைவர் எனவும், அவரின் பாதுகாப்புக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.