
முன்னாள் கிரிக்கட் வீரர் பயணித்த வாகனம் விபத்து
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் லஹிரு திரிமான்னே பயணித்த வாகனம் நேற்று அதிகாலை அனுராதபுரம், திரப்பனே பகுதியில் வீதி விபத்துக்குள்ளானது.
தகவல்களின்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் பயணித்த வாகனம் திரப்பனை 117 மைல் போஸ்ட் பகுதிக்கு அருகில் எதிர் திசையில் பயணித்த லொறி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் திரிமான்னேவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

