முன்னாள் கால்பந்து வீரர் கைது

 

முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாடிய குறித்த சந்தேகநபர், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டக் காரணங்களுக்காக இவரது பெயரை வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எசெக்ஸ் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.