முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, ​​சமர்ப்பணங்களை பரிசீலித்த குருநாகல் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடத்தல் மற்றும் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 2025 ஜூலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.