முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது!

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒள்றை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய போது ஏற்பட்ட வீதி விபத்தை தொடர்பாக, கொள்ளுப்பிட்டியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனத்தை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில் லொஹான் ரத்வத்த நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.