
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய நடவடிக்கை !
கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை களனி பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இருந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்பான தகவல்களை அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்குவதற்கு தவறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது தொலைபேசியும் இயங்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
