முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார்.

இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.

இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய அவர், ஏற்றுமதி அபிவிருத்தி, வெகுஜன ஊடகத் தகவல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பல பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.