முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இரு மகள்கள் – மருமகன் கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன், சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதிமோசடி, தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக சமித்ரி ரம்புக்வெல்ல, அமலி ரம்புக்வெல்ல மற்றும் அவரது கணவர் இசுரு புலஸ்தி பண்டார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.