முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

முன்னாள் அமைச்சர்கள் மூவரின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வழிநடத்தலில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது .

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு நேற்று முன்தினம் (18) அழைக்கப்பட்ட போதிலும் தனிப்பட்ட காரணங்களால் வருகை தர முடியாது என அவர் அறிவித்துள்ளார்.